கியூபெக்கில் பலத்த காற்று மற்றும் மழை - ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்தடை

5 புரட்டாசி 2025 வெள்ளி 20:43 | பார்வைகள் : 612
கனடாவின் தெற்கு கியூபெக் மாகாணத்தில் பலத்த காற்று மற்றும் மழை பெய்ததால், ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டன.
மாலை 5.30 மணிக்கு சுமார் 70,000 வாடிக்கையாளர்கள் மின்சார வசதியின்றி இருந்தனர் என ஹைட்ரோ கியுபகெ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரவு 10.30 மணிக்குப் பின்னரும் 50,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் மின்சாரமின்றி இருந்தனர்.
புயலின்போது, 20 வயதிற்குட்பட்ட இளம் பெண் ஒருவர் பெரிய மரக்கிளை விழுந்ததில் காயமடைந்தார்.
அவர் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவசர மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1