காவல்துறை வாகனத்தை மோதியதால் பரபரப்பு - மூவர் காயம்!!
5 புரட்டாசி 2025 வெள்ளி 11:54 | பார்வைகள் : 1623
புதன்கிழமை (03/09/2025) இரவு 11 மணியளவில் Villepinte அருகே காவல்துறை வாகனத்தை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. Sevran பகுதியில் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளுக்கு இணங்காமல் தப்பிச் சென்ற சிட்ரோன் (Citroën C1) காரை, காவல்துறையினர் துரத்திச் சென்றனர். Villepinte அருகே வந்தபோது, அந்தக் கார் திடீரென பின்சென்று காவல்துறை வாகனத்தை மோதி சேதப்படுத்தியது.
இதில் மூன்று காவல்துறையினர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். அச்சமயம், காவல்துறையினரில் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இருந்தும் கார் ஓட்டுனர் வேகமாக தப்பிச் சென்றார்.
தப்பிச் சென்ற வாகனத்தை அடையாளம் காண காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாகனம் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும், மேலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan