பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததால், இஸ்ரேல் மக்ரோனை வரவேற்க மறுப்பு!!
.jpeg)
4 புரட்டாசி 2025 வியாழன் 19:45 | பார்வைகள் : 3341
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் Gideon Saar செப்டம்பர் 4, வியாழக்கிழமை, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான தனது முடிவை மாற்றும் வரை இஸ்ரேலுக்கு விஜயம் செய்வது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று கூறியுள்ளார்
பிரெஞ்சு அமைச்சர் ஜோன்-நோயல் பரோவுடன் நடந்த சந்திப்பின் போது, அவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இந்த முடிவுகள் இஸ்ரேலின் நலன்களுக்கு எதிரானவை என அவர் கூறியுள்ளார்.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, பாலஸ்தீனிய மாநிலத்துக்கான அங்கீகாரம் ஹமாஸுக்கு பரிசளிப்பது போல இருக்கிறது என இஸ்ரேல் கருதுகிறது. இதற்கு மாறாக, மக்ரோன், இரு-மாநிலத் தீர்வே இஸ்ரேலியரும் பாலஸ்தீனியரும் நியாயமான வழியைக் காணும் ஒரே தீர்வு எனக் கூறுயுள்ளார் மற்றும் அதற்கான உலகளாவிய ஆதரவை ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1