Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பை எதுவும் நிறுத்தாது! - மக்ரோன் சூளுரை!!

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பை எதுவும் நிறுத்தாது! - மக்ரோன் சூளுரை!!

3 புரட்டாசி 2025 புதன் 08:46 | பார்வைகள் : 2689


இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவதால், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதை நிறுத்துவோம் என்று அர்த்தமாகாது என ஜனாதிபதி மக்ரோன் சூளுரைத்துள்ளார்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ் தலைமையில் பல உலக நாடுகள் ஒன்றிணைந்த வேளையில், பாலஸ்தீன அதிகாரிகளுக்கு ஐ.நா பொது மாநாட்டில் கலந்துகொள்ள வீசா வழங்கப்போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு உடனடியாக கண்டனங்கள் வலுத்துள்ளன. ‘அமெரிக்காவின் அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது!’ என ஐ.நா சபை அறிவித்துள்ளது.

இம்மாதம் 22 ஆம் திகதி இந்த மாநாடு இடம்பெற உள்ளமையும், அதில் வைத்து பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதை மக்ரோன் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்