வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல்! - ஆயுததாரி சுட்டுக்கொலை!!

2 புரட்டாசி 2025 செவ்வாய் 20:36 | பார்வைகள் : 2741
வீதியில் சென்ற பலரை கண்மூடித்தனமாக தாக்கிய ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
மார்செய்யின் 1 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இன்று செப்டம்பர் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. 35 வயதுடைய Abdelkader D என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார். கத்தி ஒன்றையும், தடி ஒன்றையும் வைத்துக்கொண்டு வீதியில் சென்ற பலர் மீது கண்மூடித்தனமாக மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். இதில் ஐவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார்.
மாலை 5.10 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதை அடுத்து, காவல்துறையினரால் குறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. தாக்குதலுக்கு இலக்கான நபர்கள் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை எனவும், தாக்குதலின் நோக்கம் குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1