ஆப்கான் நிலநடுக்கம் - 1,100ஐ கடந்த பலி எண்ணிக்கை!

2 புரட்டாசி 2025 செவ்வாய் 20:43 | பார்வைகள் : 634
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,100ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பரவலான பேரழிவை ஏற்படுத்தியதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
நேற்றுவரை 800 பேர் வரை உயிரிழந்ததாகவும், 2500க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்தியா தேவையான நிவாரண உதவிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்ததைத் தொடர்ந்து சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும், நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.
பின்னர் காபூலில் 1000 குடும்பங்களுக்கு கூடாரங்களை இந்தியா வழங்கியதாகவும், காபூலில் இருந்து குனாருக்கு இந்திய தூதரகம் 15 டன் உணவுப் பொருட்களை உடனடியாக அனுப்பியதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,100ஐ கடந்துள்ளதாகவும், 3500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜலாலாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக கணிசமான உயிர் மற்றும் சொத்து இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், பல கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன என்றும் சாலைகள் சேதமடைந்ததால் பரவலான பீதி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபான் அரசின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பலி எண்ணிக்கை உயர்வு குறித்து குறிப்பிட்டார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1