Paristamil Navigation Paristamil advert login

பரிஸில் நகை கடையில் 1.5 லட்சம் யூரோ மதிப்புள்ள நகைகள் களவு!

பரிஸில் நகை கடையில் 1.5 லட்சம் யூரோ மதிப்புள்ள நகைகள் களவு!

2 புரட்டாசி 2025 செவ்வாய் 14:28 | பார்வைகள் : 5942


பரிஸில் உள்ள Cambon தெருவில் ஒரு பழமையான நகை விற்பனையாளரை, போலி வாடிக்கையாளர் ஒருவர் ஏமாற்றி 150,000 யூரோக்கள் மதிப்பிலான நகைகள் மற்றும் 15,000 யூரோக்கள் பணத்துடன் உள்ள பையை திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் வியாபாரி கடையின் பின்புறம் சென்றிருந்த நேரத்தில், திங்கட்கிழமை மாலை நடந்துள்ளது. வியாபாரி எந்தக் காயமும் இல்லாமல், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல், மே 2024ல், பாரிஸ் 7வது வட்டாரத்தில் மூன்று முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஒரு கலைப் பொருள் விற்பனையாளரை தாக்கி, 1.6 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்களை அழித்து விட்டனர். இந்த சம்பவங்கள், பாரிஸில் கலை மற்றும் நகை வியாபாரிகள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்