Paristamil Navigation Paristamil advert login

ஐபோன் 12-க்கு ஐரோப்பா முழுவதும் புதிய மென்பொருள் மேம்படுத்தல்!!

ஐபோன் 12-க்கு ஐரோப்பா முழுவதும் புதிய மென்பொருள் மேம்படுத்தல்!!

1 புரட்டாசி 2025 திங்கள் 22:55 | பார்வைகள் : 2050


அப்பிள் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐபோன் 12 மாடலுக்கான மென்பொருள் மேம்படுத்தலை வெளியிட உள்ளது. இது, அந்த மொபைல் சாதனத்தின் கதிர்வீச்சு சக்தி அதிகமாக இருப்பதாக ஐரோப்பிய ஆணையம் உறுதிபடுத்தியதற்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். 

2023 அக்டோபரில் இந்த மேம்படுத்தல் பிரான்சில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஏனெனில் தேசிய அலை வாரியமான ANFR இந்த மாடல் மனித உடலால் உறிஞ்சும் மின்னலை அளவை மீறுவதாக கண்டறிந்தது.

2023ல், பிரான்ஸ் ஐபோன் 12 விற்பனைக்கு தடை விதித்தது, மேலும் அப்பிள் மென்பொருள் திருத்தத்தை மேற்கொண்டது. ஐரோப்பிய ஆணையம் 2025 ஆகஸ்ட் 19 அன்று பிரான்ஸின் நடவடிக்கையை நியாயமானது என உறுதி செய்தது. 

அப்பிள், தங்களது தயாரிப்பு உலகளாவிய பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்கின்றது என்றாலும், ஐரோப்பிய ஆணையின் முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அமைச்சர் ஜோன்-நோயல் பரோ, “நாங்கள் எடுத்த தீர்மானம் சரியாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்