Mantes-la-Jolieஇல் வெளிநாட்டு அநாதை பிள்ளகளுக்கான அடைக்கல மையத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

1 புரட்டாசி 2025 திங்கள் 21:48 | பார்வைகள் : 2061
Mantes-la-Jolie நகரில் வால்-புரே (Val-Fourré) பகுதியில் வெளிநாட்டு அனாதை சிறுவர்களுக்காக 2026ல் திறக்க திட்டமிடப்பட்ட அடைக்கல மையத்தின் கட்டுமானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மையம் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 100 சிறுவர்களுக்காக ய்வ்லின் (Yvelines) மாவட்டக் கவுன்சிலால் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் நகர மேயர் ரபாயல் காக்னே (Raphaël Cognet), ஏற்கனவே சிக்கலான இந்தப் பகுதியில் மேலும் சுமை சேர்க்கக் கூடாது எனக் கூறி திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் « référé suspension » வழக்குத் தாக்கல் செய்தார்.
இந்த நீதிமன்ற நடவடிக்கையின் காரணமாக, இன்னும் தொடங்காத கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இது திட்டம் ரத்து செய்யப்படுவதற்கான உறுதியான அறிகுறி அல்ல, ஆனால் தாமதப்படுத்தும் முயற்சி மட்டுமே. நீதிபதி செப்டம்பர் 29ஆம் திகதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். மாவட்டக் கவுன்சில் இந்த விவகாரத்தில் கருத்தளிக்க மறுத்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1