காஷ்மீர் எல்லையில் பயங்கரவாத குழு ஊடுருவல் முயற்சி முறியடிப்பு!
2 புரட்டாசி 2025 செவ்வாய் 11:48 | பார்வைகள் : 1081
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாத குழுவினர் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட்டில், உள்ள எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு பயங்கரவாதக் குழு நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் எச்சாரித்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.இதனால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. ட்ரோன்கள் மற்றும் பிற கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்தி ராணுவத்தினர் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது; காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய பயங்கரவாத சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan