ஏமனின் ஹவுதிகள் இஸ்ரேலுக்கு மிரட்டல்
31 ஆவணி 2025 ஞாயிறு 16:38 | பார்வைகள் : 1186
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் தங்கள் பிரதமர் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப் போவதாக ஏமனின் ஹவுதிகள் சபதம் செய்துள்ளனர்.
வியாழக்கிழமை ஏமன் தலைநகர் சனாவில் நடந்த தாக்குதலில் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை ஹவுதிகள் உறுதிப்படுத்தினர், இதில் மற்றவர்களும் படுகாயமடைந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஹவுதிகளின் உயர் அரசியல் குழுவின் தலைவர் மஹ்தி அல்-மஷாத் காணொளி அறிக்கை ஒன்றில் குறிப்பிடுகையில், நாங்கள் பழிவாங்குவோம், காயங்களை வெற்றியாக மாற்றுவோம், கடவுளுக்கும் அன்பான யேமன் மக்களுக்கும், தியாகிகள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் உறுதியளிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ஹவுதி குழுவில் மிக மூத்த நபரான அல்-ரஹாவி எனபவரே இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர். வழக்கமான அமைச்சரவை கூட்டத்தின் போதே, இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹவுதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் முகமது நாசர் அல்-அதிஃபி தெரிவிக்கையில், அமெரிக்க ஆதரவு சியோனிச எதிரியை எதிர்கொள்ள அனைத்து மட்டங்களிலும் ஹவுதிகள் தயாராக உள்ளனர் என்றார்.
ஹவுதிகள் மீதான இந்தப் படுகொலைத் தாக்குதலை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸும் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஹவுதி பிரதமர், அவரது பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் என்றும் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 7 தாக்குதல்களைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செங்கடல் கப்பல் போக்குவரத்தை ஹவுதிகள் குறிவைத்து வருகின்றனர்.
மேலும் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசியுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து,
மத்திய கிழக்கில் ஈரானின் நெருங்கிய பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களை ஒழிக்க இஸ்ரேல் தனது வலுவான உளவுத்துறை அமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan