சுவிட்சர்லாந்தில் மலைப்பாம்பை மடியில் வைத்துக்கொண்டு பயணம் செய்த நபர்
30 ஆவணி 2025 சனி 09:47 | பார்வைகள் : 3272
சுவிட்சர்லாந்தில், ஒரு பயணி, மலைப்பாம்பொன்றை ஒரு பெட்டியில் வைத்து, அந்தப் பெட்டியை தன் மடியில் வைத்துக்கொண்டு பயணித்துக்கொண்டிருப்பதை ஃபெடரல் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சுவிட்சர்லாந்தின் Ticino மாகாணத்தில், சுவிஸ் இத்தாலி எல்லைக்கருகே அமைந்துள்ள Porto Ronco என்னுமிடத்தில், ஃபெடரல் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, ஒரு காரில், ஒரு பெட்டியில் அடைக்கப்பட்ட மலைப்பாம்பை தன் மடியில் வைத்துக்கொண்டு ஒருவர் பயணிப்பதைக் கண்டுள்ளார்கள்.
அந்த பாம்பு king python என்னும் பாதுகாக்கப்பட்ட வகை பாம்பு ஆகும்.
அந்தக் காரில் இருவர் பயணித்த நிலையில், அவர்கள் இருவரும் சுவிட்சர்லாந்தில் வாழும் இத்தாலி நாட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் அந்த மலைப்பாம்பை இத்தாலியிலிருந்து வாங்கிக் கொண்டுவந்துள்ளார்கள்.
இவ்வகை பிராணிகளை வாங்க, CITES என்னும் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.
ஆனால், அந்தப் பாம்புடன் பயணித்தவர்களிடன் CITES உரிமம் இல்லை. ஆகவே, அதிகாரிகள் அந்த பாம்பை பறிமுதல் செய்துள்ளார்கள்.
CITES அல்லது Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora என்பது அழிந்துவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan