பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து கனடா பரிசீலனை
31 ஆடி 2025 வியாழன் 06:18 | பார்வைகள் : 1158
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து கனடிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயங்கினால், பஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து கனடாவின் மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கின்றது என அந்நாட்டு பிரதான ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நாளைய தினம் கனடா அமைச்சரவை கலந்தாலோசிக்க உள்ளது.
எனினும் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், செப்டம்பரில் பஸ்தீனத்தை அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் சர்வதேச நிவாரணங்கள் மற்றும் மனிதநேய உதவிகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காசா மீது தாக்குதல் நிறுத்த வேண்டும் எனவும், நீடித்த சமாதான வழிமுறையில் இணைந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்ததுள்ளார்.
எல்லா சிறை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் பிராந்திய ஆட்சி திட்டத்தில் இருந்து விலக வேண்டும் எனவும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் ஹமாஸ் கோரியுள்ளது.
இதேவேளை, மேற்கத்திய நாடுகளின் இந்த அணுகுமுறையை “தீவிரவாத அமைப்பான ஹமாஸுக்கு பரிசு அளிப்பது போல” என இஸ்ரேல் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மக்ரோன் கடந்த வாரம், செப்டம்பரில் பஸ்தீன அரசை அங்கீகரிக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்ததிலிருந்து.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan