உலகிலுள்ள அழகிய 50 தீவுகளில் முதலிடம் பெற்ற இலங்கை
30 ஆடி 2025 புதன் 12:37 | பார்வைகள் : 1301
உலகிலுள்ள 50 சிறந்த தீவுகளின் பட்டியலில் – மிக அழகான தீவாக இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. உகளாவிய பயண தளமான ‘பிக் 7 ட்ராவல்’ (Big 7 Travel) 2025ஆம் ஆண்டுக்காக இதனைப் பட்டியலிட்டுள்ளது.
பிரெஞ்சு பாலினீசியாவில் உள்ள மூரியா, ஈக்வடோரில் உள்ள கலபகோஸ் தீவுகள் மற்றும் சீஷெல்ஸ் போன்ற பிரபலமான தீவுகளை விடவும், இந்தப் பட்டியலில் இலங்கை முந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலாசார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகளின் வளமான கலவைக்காக இலங்கை இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, பிக் 7 டிராவல் தெரிவித்துள்ளது.
இலங்கையை அதன் தனித்துவமான வனவிலங்குகள், பண்டைய கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் உற்சாகம் நிறைந்த உள்ளூர் அனுபவங்களுக்காகவும் – இலங்கை பாராட்டப்பட்டுள்ளது.
‘பிக் 7 ட்ராவல்’ (Big 7 Travel) பட்டியலிட்டுள்ள 10 தீவுகள் வருமாறு;
இலங்கை
மோரியா – பிரெஞ்சு (பாலினேசியா)
சோகோட்ரா, ஏமன்
மடீரா (Madeira)
தி கலபகோஸ் – ஈக்வடோர்
கிரேட் எக்ஸுமா – பஹாமாஸ்
சீஷெல்ஸ்
அச்சில் தீவு (Achill Island) – அயர்லாந்து
கோ லிப் (Koh Lipe) – தாய்லாந்து
மிலோஸ் – கிரீஸ்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan