எனக்கு முதல்வர் ஆகும் தகுதி இல்லையா?: திருமாவளவன்
28 ஆடி 2025 திங்கள் 11:50 | பார்வைகள் : 3727
நான், 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எனக்கு முதல்வராகும் தகுதி இல்லையா?” என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது:
ஹிந்து மதத்தை மட்டுமே நான் விமர்சிப்பதாக கூறுகின்றனர். அதை, பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்புகள், சுய விமர்சனமாக பார்க்காதது ஏன்? ஹிந்து மதம், சகோதரத்துவமாக இல்லை. தி.மு.க., -- காங்., - வி.சி., மற்றும் -கம்யூனிஸ்டுகள் -அனைவரும் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.
காங்கிரசுடன் வி.சி.,க்கு வேறுபாடு இருந்தாலும், இந்த கொள்கையில் ஒன்றாக இருக்கிறோம். பா.ஜ.,வை உடன் வைத்துக் கொண்டு, 'தமிழகத்தை காப்போம்; மக்களை மீட்போம்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுகிறார்.
இப்போது, புதிதாக நடைபயணம் கிளம்பியவர்கள் கூட, பா.ஜ.,வை ஆதரிப்பவர்கள் தான். எதிரிகளை தனியாகவே தி.மு.க., சந்திக்கும்; திருமாவளவன் போன்றவர்கள் ஆதரவு தேவை இல்லை.
பழனிசாமி என்னை அழைத்ததாக நான் கூறினேனா? துணை முதல்வர் பதவி தருவதாக அழைக்கின்றனர்.
அப்படி என்றால், முதல்வர் பதவிக்கு நான் தகுதி இல்லாதவனா? நானும் ரவுடிதான் என்பது போல், யார் யாரோ கிளம்புகின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எனக்கு, முதல்வர் ஆகும் தகுதி இல்லையா?
கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், ராகுல் என அரசியலில் பயணித்துள்ள எனக்கு, துணை முதல்வர் பதவி ஆசை காட்டினால் சென்று விடுவேன் என நினைக்கின்றனர். வி.சி., கொள்கை அரசியலில் ஈடுபடும் கட்சி; தமிழகத்தில் சங் பரிவார் காலுான்றி விடக்கூடாது என்பதற்காகவே, தி.மு.க.,வுடன் உறுதியாக நிற்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan