செம்மணியில் பிரேதப் பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் மீட்பு

26 ஆடி 2025 சனி 12:17 | பார்வைகள் : 4153
மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
புதிய பகுதியான தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருந்து சட்ட ரீதியாக உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு பிரேதப் பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டது.
நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருந்து சட்ட ரீதியாக உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு பிரேதப் பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டது.
அந்தச் சடலம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது என்பதைச் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் அடிப்படையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அது மீளவும் மண் போட்டுப் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளது.
தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1