மத்திய அரசிடம் வாங்கும் நிதி எங்கு தான் செல்கிறது? அண்ணாமலை
26 ஆடி 2025 சனி 06:24 | பார்வைகள் : 1381
எளிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களான பிரதமரின் வீடுகட்டும் திட்டம், ஜல் ஜீவன், பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதிகள் எங்கு தான் செல்கிறது?,' என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை; திருப்பூர் மாவட்டம், அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட கோடந்தூர் திருமூர்த்திமலை கிராமத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இன்று வாழவே முடியாத நிலைக்கு சிதிலமடைந்திருந்தும், வேறு வழியின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் வசித்து வருகிறார்கள் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள்.
வீடுகள் இடிந்து, மின்சார வசதி, சரியான குடிநீர் வசதி, முறையான சாலை வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்வாதாரத்திற்காக அவதிப்பட்டு வரும் மக்கள், அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கைகள் பல விடுத்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. திமுக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தான் ஆச்சரியம்.
வருவாய்த்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு 110 வீடுகளைப் புதுப்பித்துத் தரப் பழங்குடியினர் நல ஆணையம், ஆதி திராவிடர் நலத்துறைக்குப் பரிந்துரைத்ததாகச் சொல்லப்படும் நிலையில், ஒன்றரை வருடங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையோ, நிதியோ ஒதுக்கப்படவில்லை என்று மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கூறியிருப்பது மலைவாழ் மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் திமுக அரசிற்கு இல்லை என்பதையே காட்டுவதாக உள்ளது.
2022ம் ஆண்டு வரை உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டிருக்கும் திருமூர்த்திமலை மக்கள், முதல் முறையாக வாக்களித்து தங்களில் ஒருவரைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து பஞ்சாயத்து மூலம் வீடுகளைப் புதுப்பிக்கத் தீர்மானம் நிறைவேற்றி காலங்கள் பல ஆகியும் அவர்களின் நிலைமை மாறவில்லை. எளிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களான பிரதமரின் வீடுகட்டும் திட்டம், ஜல் ஜீவன், பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதி எங்கு தான் செல்கிறது?
உடனடியாக திருமூர்த்திமலை மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிட வேண்டும். மேலும், இது போன்ற, மற்ற மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்களையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan