உக்ரைனில் அரச விரோதக் கவன ஈர்ப்பு போராட்டம்
24 ஆடி 2025 வியாழன் 14:04 | பார்வைகள் : 1557
உக்ரைனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவின் முழுமையான ஆக்கிரமிப்பு தாக்குதலுக்குப் பிறகு, மிகப்பெரிய அரச விரோதக் கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கி ஊழல்தடுப்புக் குழுக்களின் சுதந்திரத்தை குறைக்கும் வகையில் எடுத்து கொண்ட நடவடிக்கையை எதிர்த்து, தலைநகர் கீவ், மேற்குத் திசையின் ல்வீவ், கிழக்கில் டினிப்ரோ மற்றும் தெற்கில் ஓடெஸா போன்ற நகரங்களில் மக்கள் ஏராளமானோர் தெருவில் இறங்கி போராடியுள்ளனர்.
உக்ரைனின் பாராளுமன்றில் தேசிய ஊழல்தடுப்பு பணியகம் (NABU) மற்றும் சிறப்பு ஊழல்தடுப்பு வழக்குரைஞர் அலுவலகம் (SAPO) ஆகியவற்றின் மேற்பார்வையை அரசியலால் நியமிக்கப்படும் தடையுரிமை பெற்ற பொதுவழக்குரைஞரிடம் ஒப்படைக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.
"ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கனவில் இருந்து இது ஒரு பின்னடைவாகும்" என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான முயற்சியில், உயர் மட்ட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அவசியமாகப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகமும் கடந்த வருடம் உக்ரைன் அரசுக்கு ஊழலை கட்டுப்படுத்த அழுத்தம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சட்டம் குறித்த விமர்சனங்கள் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இருந்து எழுந்துள்ளன.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திமிட்ரோ குலேபா, இந்நடவடிக்கையை “உக்ரைனுக்கான மோசமான நாள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் துணை பிரதமர் ஒலெக்சி செர்னிஷோவ் உட்பட, ஜனாதிபதி செலன்ஸ்கியின் நெருக்கமான சில அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்துள்ளன.
செவ்வாய்கிழமை இரவு, செலன்ஸ்கி இந்தச் சட்டத்தை கையெழுத்திட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அவர் கூறுகையில், “இவை இரண்டும் தொடரும், ஆனால் ரஷ்யா நுழையும் அபாயங்களை ஒழிக்கவே இந்த மாற்றம் அவசியம்” என விளக்கம் அளித்தார்.
இதற்கு முன்னதாக, உக்ரைன் அதிகாரிகள் ஊழல்தடுப்புப் பிரிவில் ஒரே நேரத்தில் சுற்றிவளைப்பு மேற்கொண்டு, இருவரை ரஷ்யா உளவுப் பணிக்காக வேலை பார்த்ததாக கைது செய்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan