அதிக உயிர்களை பலிகொண்ட வெப்பம்!!

23 ஆடி 2025 புதன் 17:39 | பார்வைகள் : 2077
2025 ஆம் ஆண்டுக்கான கோடைகாலத்தின் ஆரம்பமாக ஜூன் 19 ஆம் திகதியில் இருந்து ஜூலை 6 ஆம் திகதி வரை பலத்த வெப்பம் பதிவாகியிருந்தது. 60 மாவட்டங்களில் 41℃ வரை வெப்பம் பதிவாகியிருந்தது. இந்த காலப்பகுதியில் 480 இற்கும் அதிகமான மரணங்கள் வெப்பம் காரணமாக பதிவாகியிருந்தன.
இந்த எண்ணிக்கை கடந்தவருடத்தின் இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் 5.5% சதவீதம் அதிகமாகும். சென்றவருடத்தில் 410 பேர் பலியாகியிருந்தனர்.
இவ்வருடத்தில் அதிக மரணங்கள் பதிவான மாகாணமாக Provence-Alpes-Côte d'Azur உள்ளது. அங்கு மட்டும் 140 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறைந்த அளவு மரணங்கள் பதிவான மாகாணமாக இல்-து-பிரான்ஸ் மற்றும் Hauts-de-France மாகாணம் உள்ளது.
இந்த எண்ணிக்கை கவலையளிப்பதாக பொது சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1