புடினை சந்தித்து பேச தயார்! ரஷ்யாதான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - ஜெலென்ஸ்கி அதிரடி
23 ஆடி 2025 புதன் 15:51 | பார்வைகள் : 4976
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேச தயாராக இருப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தங்களை தொடர்ந்து தாக்கும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
மறுபுறம் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புடினை நேரில் சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன். உக்ரைன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும், போரை தொடங்கிய ரஷ்யாதான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov), "உயர்மட்டக் கூட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான விவாதம் நடத்துவதற்கு முன்பு நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும்" என்றார்.
ரஷ்யா தற்போது உக்ரைனின் சுமார் 20 சதவீத நிலப்பகுதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan