தெற்கு சிரியா வன்முறை- உயிரிழப்பு எண்ணிக்கை 600 ஆக உயர்வு
20 ஆடி 2025 ஞாயிறு 12:12 | பார்வைகள் : 4270
தெற்கு சிரியாவின் ஸ்வீடா மாகாணத்தில் இந்த வாரம் நடந்த கொடிய வன்முறையினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 600 ஆக உயர்ந்துள்ளதாக அரசு நடத்தும் ஊடகமும் போர் கண்காணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஸ்வீடா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்தும் விமானத் தாக்குதலினால் அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சிரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சனாவின் கூற்றுப்படி,
டமாஸ்கஸில் உள்ள இராணுவ நிலையம் மற்றும் அரசு தளங்களை குறிவைத்து நடத்திய தாக்குதல்களின் பின்னர், ஸ்வீடா நகரின் அருகே இஸ்ரேலிய போர் விமானம் புதிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
வியாழக்கிழமை (17) நடந்த இந்த தாக்குதலில் உடனடி உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
ஜூலை 13 ஆம் திகதி முதல் உள்ளூர் ட்ரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் சிரிய அரசாங்கப் படைகளுக்கும் இடையே நடந்த சண்டையில் குறைந்தது 597 பேர் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
இந்த மோதல் பல ஆண்டுகளில் சிரியாவிற்குள் ஏற்பட்ட மிக மோசமான மோதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan