நல்லூர் ஆலயத்துக்கு வெடி குண்டு மிரட்டல் - பாதுகாப்பு பலப்படுத்தல்

17 ஆவணி 2025 ஞாயிறு 10:14 | பார்வைகள் : 874
நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு உள்ளதாக யாழ், மாநகர சபை முதல்வருக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பினால் , ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த தொலைபேசி அழைப்பு விஷமி ஒருவரின் விஷமத்தனமான செயற்பாடு என யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு நேற்றைய தினம் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட நபர் ஒருவர் நல்லூர் ஆலயத்திற்கு வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் முதல்வர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடமையில் உள்ள பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் , பொலிஸ் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுளள்னர்.
அத்துடன் ஆலய சூழலில் உள்ள வீதி தடைகளுக்கு அருகில் சோதனை கூண்டுகள் அமைத்து , பொதிகளுடன் வருவோர் மற்றும் சந்தேகத்திற்கு இடமான முறையில் வருவோரை பொலிஸார் சோதனை செய்தனர்.
அதேவேளை , முதல்வருக்கு வந்த வெடிகுண்டு எச்சரிக்கை தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1