துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - நொறுங்கி விழுந்த கட்டிடங்கள்

11 ஆவணி 2025 திங்கள் 11:42 | பார்வைகள் : 1939
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் 10-08-2025 இரவு உள்ளூர் நேரப்படி 7;10 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு துருக்கியில் ஏற்பட்ட 11 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இதில், இஸ்தான்புல், இஸ்மீர் உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், 15 க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிந்திர்கி நகரில் உள்ள கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி 81 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வரும் துருக்கி உள்துறை அமைச்சர் Ali Yerlikaya, மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 53,000 பேர் உயிரிழந்தனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1