குற்றமிழைக்கும் வெளிநாட்டவர்களை ‘தடுப்பு காவலில் வைக்கும் காலம்’ அதிகரிப்பு!

8 ஆவணி 2025 வெள்ளி 07:04 | பார்வைகள் : 2076
வெளிநாட்டினர் குற்றச்செயலில் ஈடுபட்டால், அவர்களை தடுப்புக்காவலில் வைக்கும் காலத்தை அதிகரிக்கும் சட்டத்தை அரசியலமைப்புச் சபை நிறைவேற்றியுள்ளது.
இதுவரைகாலமும், 90 நாட்களாக இருந்த இந்த தடுப்புக்காவல் காலம், தற்போது 210 நாட்களாக (ஏழு மாதங்கள்) அதிகரித்துள்ளது. இதற்கான வாக்கெடுப்பினை அரசியலமைப்பு கவுன்சில் (Conseil constitutionnel) நேற்று ஓகஸ்ட் 7, வியாழக்கிழமை மேற்கொண்டிருந்தது. ஆதரவு வாக்குகள் அதிகமாக கிடைத்ததை அடுத்து, சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு, குற்றச்செயலில் ஈடுபட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் நபருக்காக தஞ்சக்கோரிக்கை நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலத்தை அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கை ஒன்றை உள்துறை அமைச்சர் Bruno Retailleau முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1