Paristamil Navigation Paristamil advert login

பிரான்சுடனான ஒப்பந்தத்தை நீக்க நாமும் விரும்புகிறோம்! அல்ஜீரியா பதில்!

பிரான்சுடனான ஒப்பந்தத்தை நீக்க நாமும் விரும்புகிறோம்!  அல்ஜீரியா பதில்!

7 ஆவணி 2025 வியாழன் 17:21 | பார்வைகள் : 2431


 

அல்ஜீரியாவுடனான இராஜந்திர கடவுச்சீட்டு விசா விலக்கு ஒப்பந்தத்தை முறிக்க விரும்புகிறோம் என பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கு அல்ஜீரியா பதிலளித்துள்ளது.

“நாமும் அதையே விரும்புகிறோம்” என அல்ஜீரிய வெளியுறவுத்துறை அமைச்சர் Ahmed Attaf தெரிவித்துள்ளார். நேற்று ஓகஸ்ட் 6, ஜனாதிபதி மக்ரோன் ‘முறைப்படி ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரான்சுவா பெய்ரூ தலைமையிலான அரசாங்கத்திடம் அதனை ஒப்படைப்பதாகவும்’ மக்ரோன் தெரிவித்திருந்தார்.

இன்று ஒகஸ்ட் 8, வியாழக்கிழமை அல்ஜீரிய வெளியுறவுத்துறை அமைச்சர் “இதற்கு மேலும் எதுவும் உண்மையாகவும், நடைமுறைக்கு சாத்தியமானதுமாக இருக்க முடியாது. அனைத்து குற்றங்களையும் அல்ஜீரியா மீது மக்ரோன் சாய்த்துள்ளார். உண்மை அவ்வாறில்லை என குறிப்பிட்ட அவர், ஒப்பந்தம் முடிவுக்கு வருவதையே தாமும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்