Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க வரிகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பு!!

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க வரிகளுக்கு  எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பு!!

5 ஆவணி 2025 செவ்வாய் 22:09 | பார்வைகள் : 4899


ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா கடந்த ஜூலை 27ஆம் திகதி ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த இறக்குமதி வரிகளுக்கு எதிரான ஐரோப்பாவின் பழிவாங்கும் நடவடிக்கைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

கடந்த மாதங்களில், ஐரோப்பிய ஆணையம், 93 பில்லியன் யூரோ மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களின் பட்டியலை வரிவிதிப்பதற்காக தயாரித்து வைத்திருந்தது. இதில் சோயா, கார்கள், விமானங்கள் உள்ளிட்டவை இருந்தன.இந்த புதிய ஒப்பந்தத்தின் படி, ஐரோப்பிய பொருட்கள் மீது அமெரிக்கா 15% வரி விதிக்க ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்த நிலையில், ஐரோப்பிய ஆணையம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய பழிவாங்கும் நடவடிக்கைகளை "தற்காலிகமாக" உறைபனியில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் டிரம்ப் நிர்வாகத்துடன் புதிய முரண்பாடுகள் ஏற்படும் நிலையில், இவற்றை மீண்டும் செயல்படுத்த ஐரோப்பா தயார் எனவும் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்