தனுஷ் நடிகை மிருணாள் தாகூருடன் டேட்டிங்...?
5 ஆவணி 2025 செவ்வாய் 13:41 | பார்வைகள் : 1311
நடிகை மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நடிகை மிருணாள் தாகூர் பிறந்த நாள் மும்பையில் கொண்டாடப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் பார்டியில் பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இதில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு அஜய் தேவ்கன் - மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சன் ஆஃப் சர்தார்’ பாலிவுட் படத்தின் ப்ரீமியர் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதிலும் தனஷ் கலந்துகொண்டார்.
தனுஷின் பக்கம் சாய்ந்து மிருணாள் அவரிடம் ஏதோ சொல்வது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து, ‘மிருணாள் தாக்கூருடன் தனுஷ் டேட்டிங்கா?’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக தனுஷ் நடிக்கும் ‘தேரே இஷ்க் மே’ பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவையொட்டி மும்பையில் ஜூலை 3-ம் தேதி பார்டி நடத்தப்பட்டது. இதிலும் தனுஷுடன் மிருணாள் தாகூர் கலந்துகொண்டார். இந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
தனுஷ் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் ‘குபேரா’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. மட்டுமல்லாமல், ‘தேரே இஷ்க் மே’ படமும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. முன்னதாக ‘ராஞ்சனா’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதற்கு தனுஷ் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan