திடீர் அறிக்கை வெளியிட்ட அஜித்!
4 ஆவணி 2025 திங்கள் 16:48 | பார்வைகள் : 1393
நடிகர் அஜித்குமார் சினிமாவில் 33 ஆண்டு நிறைவையொட்டி நேற்று நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். பொதுவாக அவர் அடிக்கடி அறிக்கை வெளியிடாதவர், மீடியாவில் பேசாதவர் என்பதால் அந்த அறிக்கை பரபரப்பானது. அந்த அறிக்கையில் பெரும்பாலும் நன்றி தெரிவித்த கருத்துகளை சொல்லி இருந்தார். சரி, 33 ஆண்டு நிறைவு என்கிறாரே, எதன் அடிப்படையில் சொல்கிறார் என்று பார்ப்போம்.
அவர் 'என் வீடு என் கணவர்' படத்தில் சின்ன வேடத்தில் நடித்து இருக்கிறார். தமிழில் 'அமராவதி' தான் அஜித்தின் முதல் படம். இதில் எந்த கணக்கு என்று கேட்டால், அவர் முதலில் ஹீரோவாக நடித்தது தமிழ் படம் அல்ல, 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்கு படம். அந்த படத்தை இயக்கியவர் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ். காஞ்சன் என்பவர் ஹீரோயின். ஒரு வங்காள படத்தின் தழுவல் அது.
அடுத்து 'அமராவதி' படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். அதற்கு முக்கிய காரணம் மறைந்த பாடகர் எஸ்பிபி. அவர் மகன் சரணும், அஜித்தும் நண்பர்கள், அமராவதி பட இயக்குனர் செல்வா, ஹீரோவை தேடிக்கொண்டு இருப்பதை அறிந்து அவர்தான், அஜித்தை சிபாரிசு செய்து இருக்கிறார். 'பிரேம புஸ்தகம்' அஜித்தின் முதல் படம் என்ற கணக்கில் வருகிறது. அந்த படத்துக்காக 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதலில் நடிக்க ஆரம்பித்தார் அஜித். அவர் நடிகராக வாழ்க்கை தொடங்கி நாள் என்பதால், நேற்று 33வது ஆண்டு நிறைவு நாளாக அவர் தரப்பு கொண்டாடியுள்ளது.
அவர் பலருக்கு நன்றி தெரிவித்தார். குடும்ப உறுப்பினர்கள் பெயரை சொன்னார். மற்ற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர்கள் பெயரை சொல்லவில்லை. ஒருவரை குறிப்பிட்டால் மற்றவர்கள் கோபித்துக்கொள்வார்கள் என முடிவெடுத்துள்ளார். அதேசமயம், தனக்கு பத்ம விபூஷண் விருது கொடுத்த ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி பெயரை குறிப்பிட்டுள்ளார். மற்ற அரசியல்வாதி யார் பெயரையும் குறிப்பிடவில்லை.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan