Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அருகே வெடிச்சத்தம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அருகே வெடிச்சத்தம்!

4 ஆவணி 2025 திங்கள் 12:00 | பார்வைகள் : 1535


உக்ரைனில் ஸபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அருகில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ரஷ்யா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

சனிக்கிழமையன்று உக்ரைனின் ஸபோரிஜியா அணுமின் நிலையத்தில் உள்ள அதன் குழு வெடிச்சத்தங்களைக் கேட்டதாகவும், அருகிலுள்ள இடத்தில் இருந்து புகை வருவதைக் கண்டதாகவும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) கூறியது.

 

அதேபோல் அறிக்கை ஒன்றில், அணுமின் நிலையம் அதன் துணை வசதிகளில் ஒன்று தாக்கப்பட்டதாகவும், ஆனால் நேரடி சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தது உலகளாவிய பாதுகாப்பு அபாயங்களை எழுப்புவதாக கூறப்படுகிறது.

 

ஏனெனில், இந்த அணுமின் நிலையமானது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் ஆகும். மேலும், உலகின் 10 பெரிய அணுமின் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.

 

 

இதற்கிடையில் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு, "துணை வசதி ZNPPயின் தள சுற்றளவில் இருந்து 1,200 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், பிற்பகலில் IAEA குழுவால் அந்த திசையில் இருந்து புகையை இன்னும் பார்க்க முடியும்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்