முதியோர் இல்லத்தில் தீ - உயிராபத்துகள்!!

4 ஆவணி 2025 திங்கள் 11:43 | பார்வைகள் : 4286
Toulouse (Gers) ) அருகிலுள்ள ஒரு முதியோர் பராமரிப்பு இல்லமான Ehpad இல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள Ehpad de l'Isle-Jourdain முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நடந்த தீ விபத்தில் 17 பேர் காயமடைந்தனர், அதில் 3 பேர் அவசரசசிகிச்சையில் உள்ளனர். தீயினால் ஏற்ப்பட்ட கரும்புகையால் பெரிதும் பதிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை இந்தப் பாரிய தீ விபத்து நடந்தது.
70 தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தீ காலை 3 மணிக்குள்ளாக பரவியதைத் தொடர்ந்து 70 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 25 மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ விபத்தினால் ஏற்பட்ட புகை மேலான மாடிகளில் பரவியது என தீயணைப்பு பணியாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
சிலருக்கு தீயினால் கடுமையான புகை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. 85 மற்றும் 86 வயதான இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் தீயினால் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக துலூசிலுள்ள Purpan மருத்துமனைக்கு அனுப்பப்பட்டனர்.
மொத்தம் 81 பேர் அந்தப் பேணகத்தில் இருந்தனர், அதில் 75 முதியவர்களும், 6 பேர் பணியாளர்களும் அடங்குவார்கள்.
தீயணைப்பு துறையின் தகவலின்படி, அந்த ஓய்வூதிய இல்லம் தற்போது பயன்படுத்தப்பட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் தீயின் புகையின் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இப்படியான பேணகங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது இப்படியான பேராபத்துக்களை விளைவிக்கும் என தீயணைப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1