RATP : மூன்று வருட போராட்டத்தின் பின்னர் - வருவாய் அதிகரிப்பு!
2 ஆவணி 2025 சனி 15:17 | பார்வைகள் : 2312
RATP பொது போக்குவரத்து நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்த நிலையில், இவ்வருடம் அதில் இருந்து மீண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் 3.9 பில்லியன் யூரோக்கள் வருவாயை ஈட்டியுள்ளது. ஜூலை 30, புதன்கிழமை இந்த தகவல்களை RATP நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற வருடத்தின் முதல் அரை ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை 13% சதவீதத்தால் வருவாய் அதிகரிப்பை சந்தித்துள்ளது. மொத்தமாக €153 மில்லியன் யூரோக்கள் அதிகமாக ஈட்டியுள்ளது.
பிரான்சின் முன்னாள் பிரதமர் Jean Castex, RATP நிறுவனத்தின் பொது இயக்குனராக கடந்த 2022 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் இந்த மாற்றம் இடம்பெற்று, வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
RATP நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் 129 மில்லியன் யூரோக்கள் இழப்பும், 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 54 மில்லியன் இழப்பும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan