குடும்ப சேமிப்பாளர்களிற்கு அதிர்ச்சி! வட்டி வீழ்ச்சி!
1 ஆவணி 2025 வெள்ளி 13:24 | பார்வைகள் : 2248
சிறு வருமானம் உள்ளவர்கள் Livret A சேமிப்பில் அதற்கான சிறந்த வடடி விகிதத்திற்காகச் சிறு சேமிப்புகளைச் செய்து வருகின்றனர். இதற்கும் அரசாங்கம் ஆப்பு வைத்துள்ளது.
2025 ஓகஸ்ட் 1ஆம் தேதி முதல், Livret A சேமிப்பு கணக்கின் வட்டிவிகிதம் 2.4% இலிருந்து 1.7ம% ஆக குறைக்கப்படும். இந்த முடிவை பிரான்ஸ் அரசு, பிரான்ஸ் மத்திய வங்கியின் ஆளுநர் பரிந்துரையின் அடிப்படையில், 2025 முதல் பகுதியில் பணவீக்கம் 0.88% ஆக குறைந்திருப்பதால் எடுத்துள்ளது.
இதற்குடன் தொடர்புடைய "நிலையான மற்றும் ஒற்றுமை மேம்பாட்டு கையேடு' Livret LDDS (Livret de développement durable et solidaire) இற்கும் வட்டிவிகிதம் அதேபோன்று குறைக்கப்படும்.
பிரான்ஸ் பொருளாதார அமைச்சகம் வலியுறுத்துவதுபோல, இந்த சேமிப்பு Livret-க்கள்:
சமூக வீடமைப்புத் திட்டங்களுக்கு நிதி வழங்குவதில்
சக்தி ஆற்றல் மாற்றுத் திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதேபோன்று, இவற்றின் வட்டிவிகிதம்:
சமூக வீடமைப்பு நிறுவனங்கள்
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MMI)
கடன்களின் விலை நிர்ணயத்திலும் தாக்கம் ஏற்படுத்துகிறது.
சாதாரண வருமானக்குடும்பங்களுக்கான LEP (Livret d’épargne populaire) வட்டிவிகிதமும் குறைவு!
தற்போதைய விகிதம்: 3.5%
புதிய விகிதம் (ஆகஸ்ட் 1 முதல்): 2.7%
இது, அதிகரித்த பணவீக்கம் குறைந்த காரணத்தால், சட்டப்படி 2.2% ஆகவே குறைக்கப்பட வேண்டியிருந்தாலும், அதற்கும் மேலான விகிதமாக 2.7% வைத்திருப்பது ஒரு பண்பாட்டுச் செயல் (geste social) என Bercy (பிரான்ஸ் பொருளாதார அமைச்சகம்) விளக்குகிறது – குறிப்பாக நலிவடைந்த மக்களுக்கான ஆதரவாக செயற்படுத்துவதாக அரசாங்கம் தெரிவித்திருப்பினும் அவர்களின் வாழ்வாதாரத்தில் கை வைத்துள்ளது.
இன்னமும் அமைச்சர்களிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் வழங்கப்படும் மிகவும் அதிகமான செலவீனங்களில் சேமிப்பைச் செய்ய பிரோன்சுவா பய்ரூவிற்குதஇ துணிச்சல் இல்லi
Livret A, LDDS, LEP ஆகியவை பிரான்சில் நிதி பாதுகாப்பு மற்றும் சமூக வளர்ச்சிக்காக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படும் அரசு ஒழுங்கமைத்த சேமிப்பு முறைகளாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan