Montreuil : கூரான ஆயுதத்தால் குத்தப்பட்டு பெண் கொலை!!

1 ஆடி 2025 செவ்வாய் 16:45 | பார்வைகள் : 1984
Montreuil (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கூரான ஆயுதம் ஒன்றினால் அவர் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று ஜூன் 30, திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 9 மணிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். எண்பது வயதுடைய பெண் ஒருவர் கூரான ஆயுதம் ஒன்றினால் நெஞ்சில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு, இரத்த வெள்ளத்தில் உறைந்து கிடந்துள்ளார்.
இறைச்சி வாட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கூரான கம்பி (skewer) ஒன்றினால் அவர் குத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது படுக்கை அறையில் வைத்து அவர் குத்தப்பட்டதாகவும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது மகன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்தே காவல்துறையினர் சமபவ இடத்துக்கு விரைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலத்தை மீட்ட காவல்துறையினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1