சிம்பு நடிக்கும் படம் 'வடசென்னை 2' ?
30 ஆனி 2025 திங்கள் 17:03 | பார்வைகள் : 1354
சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படம், வடசென்னை பின்னணியை கொண்ட கதை அம்சம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
'வாடிவாசல்' திரைப்படம் சில முக்கிய காரணங்களால் தாமதமாகி வருவதை அடுத்து, சிம்பு படம் தொடங்கப்பட்டதாக கூறிய அவர், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சார் தான் என்று தெரிவித்தார். மேலும், இந்தப் படம் 'வடசென்னை' படத்தின் இரண்டாம் பாகமா என்று பலர் கேட்டு கொண்டிருக்கும் நிலையில், "கண்டிப்பாக இது அந்த படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது. தனுஷ் நடிக்கும் படம் தான் 'வடசென்னை 2'," என்று வெற்றிமாறன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனால், அதே நேரத்தில், இந்த படத்தில் 'வடசென்னை' படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் வருகின்றன என்றும், வடசென்னை படத்தின் கதையும் இந்த படத்தின் கதையும் ஒரே காலகட்டத்தில் நடக்கும் கதை என்றும் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனுஷ்தான் 'வடசென்னை' படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அவருடைய அனுமதி இன்றி அந்த படத்தில் உள்ள காட்சிகளையோ, கதாபாத்திரங்களை பயன்படுத்த முடியாது. இது குறித்து அவரிடம் தான் பேசியபோது, "நீங்கள் தாராளமாக இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களையோ, காலகட்டத்தையோ பயன்படுத்தி கொள்ளுங்கள். நான் என்னுடைய டீமில் பேசி உடனடியாக உங்களுக்கு என்.ஓ.சி.அனுப்பி வைக்கிறேன். எனக்கு பணம் எதுவும் வேண்டாம்," என்று தனுஷ் கூறியதாக வெற்றிமாறன் தெரிவித்தார்.
ஆனால், சில யூடியூப் சேனல்களில் தனுஷ் பணம் கேட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி தனக்கு மன வருத்தத்தை அளித்துள்ளதாக வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார். "தனுஷ் பணம் கேட்டாலுமே அதில் தவறு இல்லை. ஆனால், கேட்காத போது அது குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்," என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan