Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை பொருட்களுடன் சிக்கிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை பொருட்களுடன் சிக்கிய நபர்

30 ஆனி 2025 திங்கள் 11:18 | பார்வைகள் : 2922


கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள "கிரீன் சேனல்"  வழியாக சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியுடைய கைத்தொலைபேசிகள் , டேப்லெட் கணினிகள் மற்றும் கணினிகள் 238 தொகையை கொண்டு வந்த பயணி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அவிசாவளை பிரதேசத்தைச் 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.  

குறித்த நபர் திங்கட்கிழமை அதிகாலை துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ள நிலையில் அவரின் பயணப் பையைச் சோதனையிட்ட போது குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.