மெதுவாக வாகனம் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம் விதித்த சுவிட்சர்லாந்து
30 ஆனி 2025 திங்கள் 11:18 | பார்வைகள் : 1827
சுவிட்சர்லாந்தில் மெதுவாக வாகனம் ஓட்டிய பெண்ணொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், வேகக்கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுபோல, போக்குவரத்துக்கு இடையூறாக, மிக மெதுவாக வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அபராதம் விதிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
சுவிஸ் மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வால்ட்டர் கார்ட்மேன் (Walter Gartmann) என்பவர்தான் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
அதாவது, வேகமாக செல்ல வாய்ப்பு இருக்கும் நிலையிலும், மணிக்கு 10 கிலோமீற்றர் வேகத்தில் செல்பவர்களுக்குதான் இந்த அபராதம்.
ஆனால், கிரீன் கட்சியைச் சேர்ந்தவர்களோ, மெதுவாக வாகனம் ஓட்டும் சிலர், எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக அப்படிச் செய்வதுண்டு என்கிறார்கள்.
சமீபத்தில், சூரிக்கில் ஒரு பெண் போக்குவரத்துக்கு இடையூறாக மிக மெதுவாக பயணித்ததையடுத்து அவருக்கு 400 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan