Paristamil Navigation Paristamil advert login

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் கூடும்- ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் கூடும்- ட்ரம்ப் எச்சரிக்கை

29 ஆனி 2025 ஞாயிறு 17:18 | பார்வைகள் : 2335


ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நிறுத்தம் இடம்பெற்றதையடுத்து அமெரிக்கா, ஈரான் தலைவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகப் பேசி வருகின்றனர்.

அந்தவகையில் அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் அழிந்துவிடும் என்பதால் அமெரிக்கா தலையிட்டதாகவும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கொமெய்னி கூறியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஈரான் உச்ச தலைவர் கொமெய்னியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், தெஹ்ரான் வரம்புக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டுவதாக உளவுத் துறை தகவல் கொடுத்தால், ஈரான் மீது கண்டிப்பாக மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்.

இங்கு கேள்விக்கே இடமில்லை, மற்றொரு இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட சற்றும் தயங்க மாட்டேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்