பிரித்தானியாவில் ஸ மரச்சரிவு - 7 வயது சிறுமி பலி
29 ஆனி 2025 ஞாயிறு 16:18 | பார்வைகள் : 980
பிரித்தானியாவின் எசெக்ஸில் நிகழ்ந்த மரச்சரிவில் சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாக்வெல் பூங்காவில் நிகழ்ந்த ஒரு கோர சம்பவத்தில், மரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் ஏழு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், ஆறு வயது சிறுமி ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை அன்று நடந்ததுள்ளது. மரத்தின் அடியில் விளையாடிக் கொண்டிருந்த பல குழந்தைகளில் இந்த பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் அடங்குவர்.
எசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியபடி, காயமடைந்த ஏழு வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் மேலும் மூன்று குழந்தைகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
மரம் விழுந்ததாக பிற்பகல் 2:55 மணியளவில் தகவல் கிடைத்ததும், அவசர சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆறு ஆம்புலன்ஸ்கள், மூன்று ஆம்புலன்ஸ் அதிகாரிகளின் வாகனங்கள், லண்டன் மற்றும் கென்ட் விமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
மரம் சரிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan