அமெரிக்காவை தவிர்த்து உலக வர்த்தக கூட்டமைப்பை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்!!

27 ஆனி 2025 வெள்ளி 16:04 | பார்வைகள் : 1809
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டேர் லேயன் (Ursula von der Leyen), ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பசிபிக் ஒப்பந்தத்தில் உள்ள 12 நாடுகள் (உதாரணமாக பிரித்தானியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ) இடையே ஒரு புதிய வர்த்தக கூட்டணியை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
இது, அமெரிக்கா விதித்த வரிவிதிப்புகளைத் தவிர்ப்பதற்கும், உலக வர்த்தக அமைப்பான (l'Organisation mondiale du commerce-OMC) செயலிழந்த நிலையை மாற்றுவதற்குமான முயற்சியாகும். OMC கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க தலையீட்டால் முடங்கியுள்ளது. புதிய கூட்டணியின் மூலம், விதிமுறைகளின் அடிப்படையிலான ஒரு உலக வர்த்தக அமைப்பை உருவாக்குவதே இலக்காகும்.
இந்த யோசனைக்கு ஐரோப்பிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். உர்சுலா வான் டேர் லேயன் கூறுகையில், இது OMCவின் மறுசீரமைப்புக்கான தொடக்கமாக இருக்கலாம் என்றும், அமெரிக்கா இதில் சேரவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா விதித்த 25% அலுமினிய வரி மற்றும் வாகன வரிவிதிப்புகளால் பாதிக்கப்படுகின்ற நிலையில், ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக செய்து முடிக்க முயற்சி செய்து வருகிறது. இல்லையெனில், டிரம்ப் வரிகளை மேலும் உயர்த்த வாய்ப்பு உள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1