மெக்சிகோவில் இரவு நேர கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு

26 ஆனி 2025 வியாழன் 19:45 | பார்வைகள் : 1449
மெக்சிகோவில், இரவு நேர கொண்டாட்ட நிகழ்ச்சியொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவில் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் இராபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அவர்கள் தெருவில் குடித்து விட்டு, நடனம் ஆடியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்
அப்போது. துப்பாக்கியுடன் புகுந்த அடையாளந் தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1