Paristamil Navigation Paristamil advert login

மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா?

மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா?

26 ஆனி 2025 வியாழன் 16:49 | பார்வைகள் : 2021


கடந்த 2021ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'மாநாடு'. இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் வெங்கட் பிரபுவிற்கு விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த சில மாதங்களாக வெங்கட் பிரபு வேறொரு படத்திற்கான கதை எழுதும் பணியில் உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளாதாம். இதிலும் சிம்பு தான் நடிக்கவுள்ளார். முதல் பாகத்தை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.-

வர்த்தக‌ விளம்பரங்கள்