இஸ்ரேலுக்கு உளவு பார்த்த மூவருக்கு தூக்கு தண்டனை
25 ஆனி 2025 புதன் 10:07 | பார்வைகள் : 1683
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13ஆம் திகதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியது.
இந்த மோதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு அளித்த நிலையில் ஈரானின் ஃபேர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் பகுதிகளில் உள்ள மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின.
இந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக மூவர் கைது செய்யப்பட்டனர். நாட்டின் வடமேற்கு மாகாணமான ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள உர்மியா சிறையில் இன்று மூவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டிற்குள் கொலை உபகரணங்களைக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலுடனான போரின்போது ஈரான் பலருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது. போர் முடிவுக்கு வந்தபிறகும் மரண தண்டனைகள் நிறைவேற்றக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கிலிடப்பட்ட மூவர், ஆசாத் ஷோஜாய், எட்ரிஸ் ஆலி மற்றும் ரசூல் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை ஜூன் 16 முதல் போரை உளவு பார்த்ததற்காகத் தூக்கிலிடப்பட்டனர். இன்றுடன் சேர்த்து இதுவரை மொத்தம் ஆறு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan