புதிய கல்வியாண்டு உதவித்தொகை ஆகஸ்டில்! உங்கள் குடும்பம் தகுதியுடையதா?
19 ஆடி 2025 சனி 15:19 | பார்வைகள் : 4085
பாடசாலை செல்லும் குழந்தைகளுக்காக வழங்கப்படும் புதிய கல்வியாண்டு உதவி தொகை (ARS) ஆகஸ்ட் மாதத்தில் தானாகவே பல குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
இந்த தொகை குழந்தையின் வயதைப் பொறுத்து மாறுபடும்:
- 6–10 வயதுக்கு €423,
- 11–14 வயதுக்கு €446,
- 15–18 வயதுக்கு €462 வரை
வழங்கப்படும். உதவியை பெற, குடும்பத்தின் வருமானம் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் இருக்க வேண்டும் (உதாரணமாக, ஒரு குழந்தைக்கான வரம்பு €28,444). CAF தானாகவே இந்த தொகையை 6 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு உங்கள் வங்கி கணக்கில் வைப்பிலிடும்.
ஆனால், 6 வயதிற்கு கீழ் இருந்து CP (Cours préparatoire) வகுப்பில் சேர்ந்திருந்தால் கல்விச் சான்றிதழ் வழங்க வேண்டும். 16 முதல் 18 வயது உள்ள மாணவர்களுக்கு, ARS பெற, அவர்களின் பாடசாலை செல்லும் தொடர்ச்சியை இணையத்தில் அறிவிக்க வேண்டும். CAF-இலிருந்து இதை அறிவிக்க ஒரு மின்னஞ்சல் வரும்; அதை புறக்கணிக்க வேண்டாம். இல்லையெனில் 462 யூரோ கிடைக்காது.
உதாரணமாக, ஒரு குழந்தை தொடக்கப்பள்ளியில், மற்றொன்று உயர்நிலைப்பள்ளியில் மற்றும் மூன்றாவது மேல்நிலைப்பள்ளியில் இருந்தால், மொத்தமாக 1.332,66 யூரோக்கள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.
உங்கள் 2023 ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் 2025 இற்கான தகுதி கணிக்கப்படும். வருமானம் வரம்பை சற்று மீறினாலும், குறைந்தளவு உதவி கிடைக்கலாம். CAF இணையதளத்தில் உங்கள் உரிமையை சோதிக்கலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan