உக்ரைன் தலைநகரில் ரஸ்ய உளவாளிகள் இருவர் சுட்டுக்கொலை
14 ஆடி 2025 திங்கள் 14:12 | பார்வைகள் : 1176
உக்ரைன் தலைநகரில் ரஸ்யாவின் இரண்டு உளவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் புலனாய்வு பிரிவை சேர்ந்த முக்கிய அதிகாரி கொல்லப்பட்டதை தொடர்ந்தே ரஸ்யாவின் உளவாளிகள் என கருதப்படும் ஆணும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் புலளாய்வு பிரிவை சேர்ந்த முக்கிய அதிகாரியான இவான் வொரொனிச் கையடக்க துப்பாக்கி மூலம் பத்தாம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு காரணமான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த இருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் தலைநகரில் மறைந்திருந்த இருவரும் மோதல் ஒன்றின் போது கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் எஸ்பியு பாதுகாப்பு சேவையை சேர்ந்தவர்கள் இவர்களை கைதுசெய்ய முயன்றவேளை இடம்பெற்ற மோதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இரகசிய விசாரணைகள் எதிர் உளவுத்துறை நடவடிக்கைகளின் விளைவாக எதிரிகளின் குகை கண்டுபிடிக்கப்பட்டது உக்ரைனின் பாதுகாப்பு சேவையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களை கைதுசெய்யமுயன்றவேளை அவர்கள் அதனைஎதிர்த்தனர்,இதன் காரணமாக துப்பாக்கிமோதல் இடம்பெற்றது, வில்லன்கள் அழிக்கப்பட்டனர்,உக்ரைனில் மரணம் மாத்திரமே சாத்தியம் என எதிரிக்கு எச்சரிக்க விரும்புகின்றேன் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட உக்ரைன் அதிகாரியை கண்காணிக்குமாறும் அவரின் நாளாந்த நடவடிக்கையை கண்காணிக்குமாறும் கொல்லப்பட்ட இருவருக்கும் அவர்களை வழிநடத்துபவர் உத்தரவிட்டிருந்தார் பின்னர் சைலன்சர் பொருத்தப்பட்ட கைத்துப்பாக்கியை பயன்படுத்தி கொலை செய்தனர் என உக்ரைன் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan