இனியவை யாவும்…
13 ஆடி 2025 ஞாயிறு 19:24 | பார்வைகள் : 3104
காட்சிகள் இனிது… அதில் கற்பனைகள் இனிது…
கானல் இனிது… அதில் களிப்பூட்டும் கதிரவன் இனிது…
காரிருள் இனிது… அதில் கவித்துவம் இனிது…
காடுகள் இனிது… அதில் கிளியோசை இனிது…
காதல் இனிது… அதில் காரணங்கள் இனிது…
காயங்கள் இனிது… அதில் கடமைகள் இனிது…
கூட்டங்கள் இனிது… அதில் கண்கள் விளையாடும் கண்ணாமூச்சி இனிது…
கேட்கும் குரல்கள் இனிது… அதில் காந்தம் கண்டறிதல் இனிது…
கிட்டாதது இனிது… அதில் கிட்டும் ஏக்கங்கள் இனிது…
கனவுகள் இனிது… அதில் கரையும் காலங்கள் இனிது…
கள்ளம் இனிது… அதில் காப்பாற்றப்படும் உள்ளம் இனிது…
கல்லாமை இனிது… அதில் கடலாகும் வினாக்கள் இனிது…
காலங்கள் யாவும் இனிது… அதில் கருவறை தெய்வங்களின் பதில்கள் இனிது…
கட்டுப்பாடுகள் இனிது… அதில் கோடிட்ட சுதந்திரம் இனிது…
கவின்முகம் இனிது… அதில் காணாமல் போகும் கோபங்கள் இனிது…
கல்லறை இனிது… அதில் கையேடு உன் கைக்குட்டை இனிது…
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan