ஜூலை 14ஐ முன்னிட்டு தடைபடவுள்ள மெட்ரோ, ரயில் நிலையங்களும், சாலை கட்டுப்பாடுகளும்!!!
13 ஆடி 2025 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 3059
ஜூலை 14 ஆம் திகதி கொண்டாட்டங்கள் காரணமாக, இந்த திங்கட்கிழமை பரிஸில் காவல்துறை தலைமையகத்தின் உத்தரவின் பேரில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழமை.
நாளை நடைபெறுவுள்ள இராணுவ அணிவகுப்பை முன்னிட்டு RATP அறிவிப்பின்படி, பின்வரும் மெட்ரோ நிலையங்கள் ஆரம்ப சேவையிலிருந்தே மூடப்படுகின்றன :
- Tuileries (மெட்ரோ 1)
- Concorde (மெட்ரோ 1, 8, 12)
- Champs-Elysées-Clémenceau (மெட்ரோ 1 & 13)
- George V (மெட்ரோ 1)
- Charles de Gaulle - Étoile (RER A, மெட்ரோ 1, 2, 6)
- Argentine (மெட்ரோ 1)
- Kléber (மெட்ரோ6)
- Boissière (மெட்ரோ6)
ஜூலை 14 இரவு, Eiffel Tower வானவேடிக்கை காரணமாக மாலை 7 மணிக்கு மூடப்படும் நிலையங்கள்:
- École Militaire (மெட்ரோ 8)
- Bir-Hakeim ( மெட்ரோ 6)
- Passy (மெட்ரோ 6)
- Trocadéro (மெட்ரோ6 & 9)
- Dupleix (மெட்ரோ6)
- Alma-Marceau (மெட்ரோ9)
- Pont de l’Alma (RER C)
- Champs de Mars - Tour Eiffel (RER C)
சாலை கட்டுப்பாடுகள்
பிரதான பாதுகாப்பு வட்டம் Concorde முதல் Place de l’Étoile வரை அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது Invalides மற்றும் Madeleine தேவாலயம் வரை விரிந்துள்ளது.
இந்த பகுதியில் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் நுழையவும் மற்றும் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கச்சேரி மற்றும் பட்டாசு நிகழ்வை முன்னிட்டு, 3 பாதுகாப்பு வட்டங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன:
1. மாலை 1 மணி முதல் 3 மணி வரை Champ de Mars மற்றும் Trocadéro சுற்றுப்பகுதியில் காவல் துறையினருக்கு, உதவிப் படையினருக்கு, வீடு அல்லது வேலைக்கான சான்றுகளை சமர்ப்பிக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் மற்றும் வானவேடிக்கை மண்டலத்தை அமைப்பதில் ஈடுபட்டுள்ள நிபுணர்களுக்கும் அடையாள ஆவணத்துடன் மட்டுமே நுழைவு அனுமதி.
2. மாலை 3 மணி முதல் 7 மணி வரை — அதே பகுதி, ஆனால் சற்று குறைந்த அளவில்.
3. மாலை 7 மணி முதல் இரவு 2 மணி வரை — மிக விரிவான பகுதி, Bir-Hakeim மற்றும் Alma-Marceau வரை விரிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan