ஆட்கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது!!

13 ஆடி 2025 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 5648
பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு ஆட்களை அழைத்துச்செல்லும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பா-து-கலே கடற்பிராந்தியத்தில் இருந்து ஆங்கிலக்கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு சிறிய படகுகள் மூலம் அகதிகளை அழைத்துச் செல்லும் முகவர்களாக அவர்கள் செயற்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் Saint-Omer (Pas-de-Calais) பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல வாகனங்களும், பல ஆயிரம் யூரோக்கள் பணமும், உயிர்காக்கும் கவச உடைகளும் என பல பொருட்கள் மீட்கப்பட்டன.
அவர்களில் நால்வர் ருமேனியாவைச் சேர்ந்தவர்கள் எனவும், சோமாலியா, ஈரான், ஈராக்கைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1