Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பரிந்துரை

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பரிந்துரை

12 ஆடி 2025 சனி 18:05 | பார்வைகள் : 949


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அமெரிக்க இராஜதந்திரி எரிக் மேயரை (Eric M
eyer) வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எரிக் மேயரின் பெயரை அமெரிக்க செனட்டில் உறுதிப்படுத்துவதற்காகப் பரிந்துரைத்துள்ளார்.

எரிக் மேயர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரியாக இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலைத்தீவுகள் உள்ளிட்ட 13 நாடுகளில் நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், பணியகங்களை மேற்பார்வையிடுவதற்கும் பொறுப்பாளராக செயற்படுகிறார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்