கடனை வசூலிக்கும் போது கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்; நிர்மலா சீதாராமன்
10 ஆடி 2025 வியாழன் 13:39 | பார்வைகள் : 969
கடனை திருப்பி பெறும்போது வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை கடைபிடிக்க வேண்டும் என்று வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
டில்லியில் நடந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மாநாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது; கடன்களை வசூலிக்கும் போது, வாடிக்கையாளர்கள் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடத்தப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றி கடன்களை வசூலிக்க வேண்டும்.
ரூ.500 கடனை செலுத்தாதவர்களிடம் நிதி நிறுவன ஊழியர்கள் கடினமாக நடந்து கொண்டதாக பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. நீங்கள் உங்களின் வேலையைத் தான் செய்கிறீர்கள் என்பது தெரியும். ஆனால், மனசாட்சி இல்லாமல் செயல்படக் கூடாது.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வங்கிகளால் வழங்கப்படும் மொத்த கடனில் 24% மட்டுமே வழங்குகின்றன. இதை 2047ல் குறைந்தது 50% ஆக உயர்த்த வேண்டும். 'விக்சித் பாரத் 2047' இலக்கை அடைய உதவும் வகையில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.
2021ல் ரூ.24 லட்சம் கோடியாக இருந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அளித்த கடன் தொகை, 2025ல் ரூ.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது இரட்டிப்பாகும். 2047ல் வங்கிகளின் வழங்கும் கடன் தொகையில் 50 சதவீதம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கி விட வேண்டும்.
அதிக வளர்ச்சி தரக்கூடிய சிறு,குறு, தொழில் நிறுவனங்கள், க்ரீன் எனர்ஜி உள்ளிட்ட துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan