காவல்துறை வீரர் தற்கொலை! - 12 ஆவது சம்பவம்!!

9 ஆடி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 3186
CRS காவல்துறை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜூலை 3, வியாழக்கிழமை இச்சம்பவம் Montauban (Tarn-et-Garonne) நகரில் இடம்பெற்றுள்ளது.
அந்நகரத்தின் காவல்நிலையத்தில் பணிபுரியும் CRS 28 பிரிவைச் சேர்ந்த Hugues H எனும் வீரர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சேவைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அவர் இறந்தாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீரர் முன்னதாக Sarcelles (Val-d'Oise) நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்தவர் எனவும், அண்மையிலேயே அவர் Montauban நகரில் சேவையாற்ற சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது இறுதிச்சடங்கு, இன்று ஜூலை 9, புதன்கிழமை இடம்பெற உள்ளது. இது இவ்வருடத்தில் பதிவான 12 ஆவது காவல்துறை வீரரின் தற்கொலையாகும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1